close
Choose your channels

விஜய்யின் 'லியோ' படத்தின் மாஸ் அப்டேட்.. படக்குழு வெளியிட்ட வீடியோ..!

Saturday, March 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் ‘லியோ’ படத்தின் மாஸ் அப்டேட் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் நடந்த நிலையில் தற்போது காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.

மைனஸ் டிகிரி செல்சியஸ் குளிர் இருந்தாலும் படக்குழுவினர் லோகேஷ் கனகராஜுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஒவ்வொருவராக தங்களுடைய பகுதியின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பி வருகின்றனர். தற்போது சஞ்சய்தத் காஷ்மீர் படபிடிப்பில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வரும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் சற்றுமுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் சஞ்சய்தத், ‘லியோ’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் காட்சி உள்ளது. விஜய், சஞ்சய்தத்தை கட்டிப்பிடித்து வரவேற்பது உள்பட மாஸ் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளதால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos