தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவி விலகல்… பாலியல் சர்ச்சை காரணமா?

  • IndiaGlitz, [Tuesday,August 24 2021]

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துவரும் கே.டி.ராகவன் தன்னுடைய பதவியில் இருந்து விலகிவிட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இந்த முடிவை அவர் மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்தப் பிறகே எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த திடீர் முடிவிற்கு பாலியல் சர்ச்சை குறித்த வீடியோ வெளியானதே காரணம் என்றும் தகவல் கூறப்படுகிறது. கே.டி.ராகவன் குறித்து இன்றுகாலை யூடியூப் சேனல் ஒன்றில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் பாலியல் சர்ச்சை கிளப்பும் அளவிற்கு சில காட்சிகள் இடம்பெற்ற வீடியோ ஒன்று வெளியானதாகக் கூறப்படுகிறது.

இந்த வீடியோவை சொந்தக் கட்சியைச் சேர்ந்த ஒரு நபரே வெளியிட்டதாகவும் இதையடுத்து மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்த கே.டி.ராகவன் தன்னுடைய பதவியில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் பரபரப்பு குறித்து கே.டி.ராகவன் தன்னுடைய சோஷியல் மீடியாவில் “தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யார் என்று தெரியும். என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான் 30 வருடங்களாக எந்த ஒரு பிரதிபலனுமின்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைதளங்களில் என்னை பற்றி ஒரு காணொளி வெளிவந்ததை அறிந்தேன். என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த அந்த காணொளி வெளியிடப்பட்டு உள்ளது

அதனால் இன்று மரியாதைக்குரிய மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்அதனால் இன்று மரியாதைக்குரிய மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்!“ என்று விளக்கம் அளித்துள்ளார்.