close
Choose your channels

இணையத்தில் வைரலாகும் தமிழ் நடிகையின் கவர்ச்சி நடன வீடியோ

Saturday, December 7, 2019 • தமிழ் Comments

சிவகார்த்திகேயன் நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. இந்த படத்திற்கு பின்னர் ’தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ ’சகலகலாவல்லவன்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்தார். அதன் பின்னர் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை

இதனை அடுத்து வாய்ப்புகள் பெற அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். சமீபத்தில் கூட அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுக்கையறையில் எடுக்கப்பட்டு வெளியான புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆண் நண்பர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக அரைகுறை உடையுடன் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். படுகவர்ச்சியான நடன அசைவுகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வழக்கம்போல் இந்த வீடியோவிற்கும் ரசிகர்களிடமிருந்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுகள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவுக்கு பின்னராவது அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Get Breaking News Alerts From IndiaGlitz