கிரிக்கெட் வீராங்கனையாக மாறிய முன்னணி நடிகை… வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Friday,January 29 2021]

எம்.ஸ்.தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கரின் பயோபிக் திரைப்படங்கள் பாலிவுட்டில் சக்கைப்போடு போட்டது. இதனால் பாலிவுட் தயாரிப்பாளர்கள் பலரும் பயோபிக் படங்கள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், பேட்மிட்டண் வீராங்கனை பி.வி.சிந்து, சாய்னா நோவல் போன்றோரின் பயோபிக் படங்கள் எடுக்கப்பட்டன.

அதையடுத்து பாலிவுட்டில் தடகள வீராங்கனை ரஷ்மி ராக்கெட்டின் திரைப்படம் எடுக்கப்பட்டது. அந்தப் படத்தின் நாயகியாக முன்னணி நடிகை டாப்சி பந்து நடித்து இருந்தார். தற்போது படப்பிடிப்பு முடிந்த கையோடு டாப்சி மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதுவும் ஒரு பயோபிக் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனான மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில்தான் டாப்சி பந்து கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். “சபாஷ் மிது“ எனப் பெயரிடப்பட்ட இந்த படத்திற்காக அவர் கிரிக்கெட் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்

சென்னையை சேர்ந்த மிதாலி ராஜின் 39 ஆவது பிறந்த நாளை ஒட்டி டாப்சி தன்னுடைய டிவிட்டரில் இத்தகவலை தெரிவித்து உள்ளார். மேலும் இதுகுறித்து அவர் “கிரிக்கெட் பேட் மற்றும் பந்துடனான ரொமான்ஸ் தொடங்கி விட்டது. நீண்ட தூரம் செல்ல வேண்டும். ஆனாலும் பாதி வேலை முடிந்து விட்டது. இது ஒரு மைல்கல்லாக அமையும் என்றும் இந்த பிறந்த நாளில் என்னால் உங்களுக்கு என்ன பரிசு வழங்க முடியும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் சபாஷ் மிதுவில் உங்களை நிச்சயம் பெருமைப்படுத்துவேன் என்ற வாக்குறுதியை மட்டும் என்னால் தர முடியும். இதற்காக கவர் ட்ரைவ் கற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஹேப்பி பர்த்டே கேப்டன்” என்று தெரிவித்து இருக்கிறார்.

தமிழில் வெற்றிமாறன் இயக்கிய “ஆடுகளம்“ படத்தில் அறிமுகமான இவர் “வந்தான் வென்றான்“, “ஆரம்பம்“, “காஞ்சனா 2“ போன்ற படங்களில் நடித்து இருந்தார். தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் ஒரே நேரத்தில் தடகள வீராங்கனை ரஷ்மி ராக்கெட்டின் பயோபிக் படத்திலும் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்ஜின் படத்திலும் இவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பொதுவெளியில் கொடுக்கப்பட்ட சரமாரி சவுக்கடி… என்ன காரணம்?

இந்தோனேஷியாவின் ஆச்சோ மாகாணத்தில் பொதுவெளியில் வைத்து நேற்று, 2 ஆண்களுக்கு தலா 77 சரமாரி சவுக்கடி கொடுக்கப் பட்டது.

'சூர்யா 40' படத்தில் இணைந்த பிரபல நடிகர்: மாஸ் அறிவிப்பு!

சூர்யா நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே

சூர்யா குறித்து கிளம்பிய திடுக்கிடும் வதந்தி: பிரபல இயக்குனர் விளக்கம்!

நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது என்பதும் கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே 

'ஆஸ்கார்' விருது வாங்க செலவு செய்யணுமா? நெட்டிசன் கேள்விக்கு பார்த்திபன் பதில்!

திரைத் துறையின் உயரிய விருதான ஆஸ்கார் விருது வாங்க செலவு செய்யனுமா? என நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு இயக்குனர் பார்த்திபன் அளித்துள்ள பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஆர்.ஆர்.ஆர். படத்தில் ஹாலிவுட் நடிகையின் கேரக்டர் குறித்த அறிவிப்பு!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் இந்த படம் வரும் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகும்