close
Choose your channels

சிவகார்த்திகேயன் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் இளம் இசையமைப்பாளர்.

Tuesday, March 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் தயாரித்த 'கனா' மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த தயாரிப்பு படத்தில் புரொடக்சன்ஸ் "தயாரிப்பு எண் 2" படத்தில் ரியோ ராஜ், ஷிரின் கஞ்ச்வாலா ஆகியோர் நாயகன், நாயகி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ராதாரவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் பல பிரபலமான யூடியூபில் பிரபலமான சிலரும் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவைடந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஷபீர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் இசையமைப்பாளரான ஷபிர் சமீபத்தில் வெளியான 'சகா' மற்றும் 'தில்லுக்கு துட்டு 2' உள்பட ஒருசில படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

ஷபீர் இந்த படத்தில் இணைந்தது குறித்து இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் கூறியபோது, 'ஷபிர் இசையமைத்த ஆல்பங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியை பெற்றதால், குறுகிய காலத்திலேயே அவர் ஒரு சென்சேஷனாக மாறியிருக்கிறார். மிக குறுகிய காலத்தில் வெற்றி பாடல்களை வழங்கியிருக்கிறார் ஷபீர். மிகவும் குறிப்பிடத்தக்க வகையிலான தனித்துவமான பாடல்கள் மற்றும் பின்னணி இசையை வழங்கியது தான் ஷபீர் என்ற இசைக்கலைஞரை அனைவரையும் கவனிக்க வைத்திருக்கிறது. எங்கள் படத்திற்கு ஷபீர் இசையமைப்பது மகிழ்ச்சி. எங்களது உழைப்பை ஷபீரின் இசை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என் நம்புகிறோம் என கூறினார்.

அதேபோல் இந்த படத்திற்கு இசையமைக்க கிடைத்த வாய்ப்பு குறித்து ஷபீர் கூறியபோது, 'துடிப்பான இளைஞர்கள் உள்ள ஒரு குழுவில் இணைந்தது மகிழ்ச்சி. யூடியூபில் அவர்களது நகைச்சுவை நிகழ்ழ்சிகள் மூலை முடுக்கெல்லாம் பிரபலம். ஒரு புதுமையான அனுபவத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். குறிப்பாக, சிவகார்த்திகேயன் சார் பேனரில் பணிபுரியும் ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவே எனக்கு சிறந்த இசையை வழங்கும் மிகப்பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறது என்றார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.