'தல' தோனியை ஏலத்தில் வாங்க எதையும் விற்க தயார். ஷாருக்கான்

  • IndiaGlitz, [Thursday,April 27 2017]

கிரிக்கெட் உலகின் 'தல' தோனி அடுத்த வருடம் முதல் மீண்டும் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே ரசிகர்களும் தோனியை வரவை எதிர்நோக்கி சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். சமீபத்தில் பேட்டியளித்த முன்னாள் பிசிசிஐ தலைவர் மற்றும் ஐசிசி சேர்மன் ஸ்ரீனிவாசன் அவர்களும் சென்னைக்கு அணிக்கு மீண்டும் தோனியை கேப்டன் ஆக்குவோம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தோனியை தனது அணிக்காக ஏலம் எடுக்க எனது பைஜாமா உள்பட எதையும் விற்க தயார் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் என்பது தெரிந்ததே.

ஆனால் அதே நேரத்தில் வீரர்களின் பத்து ஆண்டு ஒப்பந்தம் முடிவதால் அடுத்த ஆண்டு அனைத்து அணிகளின் கேப்டன்கள் உள்பட வீரர்கள் அனைவரும் பொது ஏலத்தில் வருவார்கள். எனவே தோனியை தங்கள் அணிக்கு கேப்டனாக்க சென்னை, கொல்கத்தா அணிகள் தவிர மேலும் ஒருசில அணிகள் முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் சென்னை அணிக்கு கோப்பையை வாங்கி கொடுத்த 'தல' தோனி மீண்டும் சென்னை அணிக்கு கேப்டனாக வேண்டும் என்பதே லட்சக்கணக்கான ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

More News

நேற்றிரவு இருளில் மூழ்கியது சென்னை: காரணம் என்ன? அமைச்சர் விளக்கம்

சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கடுமையாக இருக்கும் நிலையில் நேற்று இரவு சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லாததால் , இரவு முழுவதும் தூங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்...

மீண்டும் எம்.ஜி.ஆர் பெயருடன் களமிறங்கும் விஷால்

விஷால் மூன்று வித்தியாசமான வேடங்களில் சுந்தர் சி இயக்கத்தில் நடித்த எம்ஜிஆர் என்று கூறப்படும் 'மதகஜராஜா' என்ற திரைப்படம் முடிந்து பல வருடங்கள் ஆகியும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஆகிவிட்டதால் இந்த படத்தின் பிரச்சனைகளை பேசி முடித்து விரைவில் வெளியிட முயற்சி செய

சமூக வலைத்தளங்களில் 'பாகுபலி 2' காட்சிகள் லீக்: படக்குழு அதிர்ச்சி

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடிப்பில் உருவாகியுள்ள 'பாகுபலி 2' என்ற பெரும் எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது...

மத்திய, மாநில அரசுகளுக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கைகள்

சமீபத்தில் நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று விஷால் தலைமையில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றுள்ள நிலையில் தயாரிப்பாளர்களின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது...

வறுமையில் வாடும் பிரபல நடிகரின் குடும்பத்திற்கு தாணு நிதியுதவி

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த வில்லன் நடிகர்களில் ஒருவர், 'அடைந்தால் மகாதேவி இல்லையே மரணதேவி' என்ற வசனத்தின் கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் பி.எஸ்.வீரப்பாவை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திட முடியாது.