வதந்தி உண்மையாகிறது: 'தளபதி 63' படத்தில் 'ஷாருக்கான்'

  • IndiaGlitz, [Wednesday,April 24 2019]

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தபோது, சென்னை வந்திருந்த நடிகர் ஷாருக்கான், அட்லியின் அலுவலகத்திற்கு சென்றார் என்பது தெரிந்ததே.

இதனையடுத்து ஷாருக்கான், 'தளபதி 63' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பார் என்றும், அல்லது 'மெர்சல்' இந்தி ரீமேக்கில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஒருசிலர் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், 'தளபதி 63' படத்தில் ஷாருக்கான் நடிப்பது என்பது வதந்தி என்றும் கூறினர். ஆனால் தற்போது நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளிவந்துள்ள செய்தியின்படி இந்த வதந்தி இன்று உண்மையாகியுள்ளது. ஆம், 'தளபதி 63' படத்தில் ஷாருக்கான் தான் மெயின் வில்லன் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே பத்து முதல் பதினைந்து நிமிட காட்சிகளில் ஷாருக்கான் தோன்றவுள்ளதாகவும், ஷாருக்கான் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு மும்பை மற்றும் சென்னையில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. ஷாருக்கான் இந்த படத்தில் இணைவதால் இந்த படத்தின் வட இந்திய உரிமையின் வியாபாரம் மிகப்பெரிய அளவில் நடைபெற வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் வரை பொறுமை காப்போம்.

More News

26 நாள் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம்... 'மே' 4ம் தேதி முதல் ஆரம்பம்!

ஒவ்வொரு வருடமும் அக்னி நட்சத்திரம் (அல்லது) கத்திரி வெயில் என்று அழைக்கப்படும், அதிக வெட்பம் மிகுந்த நாட்கள், இந்த வருடம் மே 4ம் தேதி முதல் துவங்க உள்ளது.

பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்! மகள் விஷயத்தில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் படத்தில் காமெடியனாக நடித்து பிரபலமானவர் தாடி பாலாஜி.

தமிழக தங்கமகள் கோமதிக்கு தலைவர்கள் வாழ்த்து

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் மகளிர் ஓட்டப்பந்தயம் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார்.

கடற்கரை டூ கடற்கரை: சென்னையில் முதல் சுற்றுவட்ட ரயில் சேவை தொடக்கம்

சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் வழியாக மீண்டும் சென்னை கடற்கரைக்கு செல்லும் சுற்றுவட்ட ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சியில் ஒரு 'கனா' கெளசல்யா: குவியும் பாராட்டுக்கள்

தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து இன்று நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 800 போட்டியில் தங்கம் வென்றார்.