சென்னையில் ஷாருக்கானின் 'ஜவான்' படப்பிடிப்பு: ஷாருக்கானுடன் இணையும் பிரபல நடிகை!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ படத்தை அட்லீ இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ‘ஜவான்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக ஷாருக்கான் உள்பட படக்குழுவினர் சென்னை வந்துள்ளனர். இதுகுறித்து புகைப்படங்கள் இணையதளங்களில் வருகின்றன.

ஷாருக்கான் மற்றும் பிரபல நடிகை தீபிகா படுகோன் நடிக்கும் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் தந்தை - மகன் ஆகிய கேரக்டரில் நடித்து வருவதாகவும், தந்தை கேரக்டருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் மகன் ஷாருக்கான் கேரக்டருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கணவர் விக்னேஷ் சிவனுடன் தேனிலவு சென்றிருக்கும் நயன்தாரா விரைவில் சென்னை திரும்பி ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

'சூர்யா 42' திரைப்படம் எத்தனை மொழிகளில் உருவாகிறது தெரியுமா? ஆச்சரியமான தகவல்!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சூர்யா 42' படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

அமைச்சர் அமித்ஷாவை திடீரென சந்தித்த 'ஆர்.ஆர்.ஆர்.' ஹீரோ: பாஜகவில் இணைகிறாரா?

உள் துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' என்ற படத்தின் ஹீரோ திடீரென சந்தித்தது தெலுங்கு மாநிலங்களின் அ

'தளபதி 67'ல் த்ரிஷா: மறைமுகமாக உறுதி செய்தாரா லோகேஷ் கனகராஜ்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 67' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படம் குறித்த செய்திகள் அவ்வப்போது கசிந்து இணையதளங்களில் வைரலாகி

நீ என் உலக அழகியே, உன்னைப்போல் ஒருத்தி இல்லையே: வெலன்சியாவில் நயனை வர்ணித்த விக்கி!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதிகள் சமீபத்தில் இரண்டாவது தேனிலவுக்காக ஸ்பெயின் நாட்டிலுள்ள

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் நடிக்காதது ஏன்? பிரபல நடிகர் தகவல்!

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் சுமார் 500 கோடி ரூபாய்