close
Choose your channels

தமிழில் படம் தயாரிக்கும் ஷாருக்கானின் 'ரெட் சில்லீஸ்' நிறுவனம்: முதல் படம் இதுதான்!

Friday, August 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்துவரும் ’ஜவான்’ திரைப்படம் தமிழிலும் ரிலீசாக இருக்கும் நிலையில் அவரது ரெட் சில்லீஸ் நிறுவனம் முதல் முறையாக தமிழில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் வெளியான ஆலியா பட் நடித்த திரைப்படம் ’டார்லிங்ஸ்’. இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் மற்றும் நடிகை ஆலியா பட்டின் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன.

இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தின் கதை சர்ச்சைக்கு உரிய வகையில் இருந்தாலும் படத்தின் வசூல் அபாரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து படக்குழுவினர்களின் ஒருவர் கூறியபோது, ‘ இந்த படத்தின் கதை அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும் என்பதை படத்தை தயாரிக்கும்போதே உணர்ந்தோம் என்றும் அதனால் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தை தமிழ், தெலுங்கில் ரெட் சிலீஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் நிலையில் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos