close
Choose your channels

ஷாருக்கான் - அட்லி சந்திப்பு! புதிய படத்தில் இணைவார்களா?

Wednesday, April 10, 2019 • தமிழ் Comments

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று சென்னை அணியுடன் மோதும் போட்டியை நேரில் காண ஷாருக்கான சென்னைக்கு வந்திருந்தார். தனது அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி வருவதை கவலையுடன் பார்த்து வந்தாலும் இறுதியில் அவர் சென்னை அணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த போட்டியை பார்த்து கொண்டிருந்த ஷாருக்கானின் அருகே நேற்று இயக்குனர் அட்லி உட்கார்ந்திருந்ததை அடிக்கடி தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் பார்க்க முடிந்தது. இதுகுறித்து நடிகர் ஆர்ஜே பாலாஜியும் தனது கிரிக்கெட் கமெண்ட்ரியில் குறிப்பிட்டிருந்தார். இருவரும் அவ்வப்போது சீரியஸாக டிஸ்கஸ் செய்ததை பார்க்கும்போது விரைவில் ஒரு படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே 'தளபதி 63' படத்தில் ஷாருக்கான் நடிப்பதாக ஒரு வதந்தி கிளம்பி, பின்னர் அது படக்குழுவினர்களால் மறுக்கப்பட்டது. இருப்பினும் அட்லி இயக்கத்தில் 'மெர்சல்' இந்தி ரீமேக்கிலோ அல்லது புதிய கதையிலோ விரைவில் ஷாருக்கான் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz