close
Choose your channels

விஜய்யின் 'பீஸ்ட்' போஸ்டருக்கு ஷாருக்கானின் கூலான பதில்!

Friday, June 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியானது என்பதும் இந்த போஸ்டர்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டு போஸ்டர்களும் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ போஸ்டர் குறித்து ஏற்கனவே தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்த நிலையில் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ரசிகர் ஒருவர் தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ பட போஸ்டரை வெளியிட்டு ’ஒரு வார்த்தை சொல்லுங்கள்’ என குறிப்பிட்ட நிலையில் அதற்கு ‘வெரி கூல்’ என்ற கூலான பதிலை ஷாருக்கான் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த பதிலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.