ஒரே ஸ்க்ரீனில் ஷாருக்கான் - பிரபாஸ்.. ரசிகர்களுக்கு டபுள் விருந்து..!

  • IndiaGlitz, [Wednesday,August 30 2023]

ஒரே ஸ்கிரீனில் ஷாருக்கான் மற்றும் பிரபாஸ் தோன்ற வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் ரசிகர்களுக்கு டபுள் விருந்து கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்பட பலர் நடிப்பில், அட்லி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான திரைப்படம் ’ஜவான்’. இந்த படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த நிலையில் பிரபாஸ் நடித்த பிரம்மாண்டமான திரைப்படம் ’சலார்’. இந்த படத்தின் டிரைலர் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் ஷாருக்கானின் ’ஜவான்’ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் ’சலார்’ படத்தின் டிரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ஒரே திரையில் ஷாருக்கான் மற்றும் பிரபாஸை பார்க்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் ரசிகர்களுக்கு டபுள் விருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ள இந்த படத்தில் பிரித்திவிராஜ் சுகுமாரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ஜெகபதி பாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரவிபஸ்ருர் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ’கேஜிஎப்’ படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்-வெற்றிமாறன் படம் குறித்து பிரபலம் கூறிய ஆச்சரிய தகவல்.. விரைவில் அறிவிப்பு வருமா?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் தகவல் வெளியானது. இயக்குனர் வெற்றிமாறன் கூட ஒரு சில பேட்டிகளில் இது குறித்து கூறியுள்ளார்.

கவுதம் மேனன் கன்னத்தில் ஓங்கி அறைந்த பாரதிராஜா.. 'கருமேகங்கள் கலைகின்றன' ஸ்னீக்பீக் வீடியோ..!

தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கருமேகங்கள் கலைகின்றன' என்ற திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள்

கார்த்தி அடுத்த படத்தின் டைட்டில் இதுவா? இயக்குனர் நலன் குமாரசாமி திட்டம்..!

கார்த்தி நடிப்பில், ராஜு முருகன் இயக்கத்தில் உருவான 'ஜப்பான்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்

காதலியை பகிரங்கமாக அறிவிக்கின்றாரா விஜய் தேவரகொண்டா... நெட்டிசன்களின் எல்லை மீறிய கற்பனைகள்..!

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ஒரு பெண்ணின் கையை பிடித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து, விரைவில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூறுகிறேன்

தனுஷின் 'D51' படம் 40 வருடத்திற்கு முந்தைய அரசியல் கதையா? நாகார்ஜுனாவுக்கு என்ன கேரக்டர்?

தனுஷ் நடித்து இயக்கி வரும் 'D50' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'D51' படத்தின் தகவல்கள் வெளியாகி