'ஜவான்' வசூல் ஒரே நாளில் இத்தனை கோடியா? ரூ.1000 கோடி கன்ஃபர்ம்..!

  • IndiaGlitz, [Friday,September 08 2023]

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில், அட்லி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ’ஜவான்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான நிலையில் இந்த படத்திற்கு ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்தனர்

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் இந்த படம் ரூ.129 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இயக்குனர் அட்லி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்,

இந்தியாவில் மட்டும் இந்த படம் 90 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் வெளிநாட்டில் 40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஷாருக்கானின் முந்தைய படமான ‘பதான்’ உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் இந்தப் படமும் அதே வசூலை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலை நாளான நேற்றும், இன்றும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஜவான் ஓடிக்கொண்டிருக்க்கும் நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் சனி ஞாயிறு விடுமுறை என்பதால் இந்த இரு நாட்களில் மிகப்பெரிய வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

விஷ்ணு விஷால் வீட்டில் என்ன விசேஷம்? குவிந்த தோழிகள் மற்றும் உறவினர்கள்.. வைரல் புகைப்படங்கள்..!

 நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டா தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் இந்த கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

தள்ளி போகிறதா 'சந்திரமுகி 2'? 'மார்க் ஆண்டனி' திரைப்படத்திற்கு ஜாக்பாட்..!

வரும் செப்டம்பர் 15ஆம் தேதி ராகவா லாரன்ஸ் நடித்த 'சந்திரமுகி 2' மற்றும் விஷால் நடித்த 'மார்க் ஆண்டனி'  ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்

அட்லியுடன் 'ஜவான்' படம் பார்த்த நயன்தாரா.. வைரலாகும் மும்பை வீடியோ..!

அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நயன்தாரா விஜய் சேதுபதி நடிப்பில், உருவான 'ஜவான்' திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும், இந்த படம் முதல் நாளே உலகம் முழுவதும் ரூபாய் 100

விஷாலின் 'மார்க் ஆண்டனி' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்..!

விஷால் நடித்த  'மார்க் ஆண்டனி' திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில்  இந்த படத்தின் இறுதி கட்ட புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறாது.

மகாலட்சுமி கணவர் தயாரிப்பாளர் ரவீந்தர்  சந்திரசேகர் திடீர் கைது.. என்ன காரணம்..!

நடிகை பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவரும், தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் திடீரென நேற்று கைது செய்யப்பட்டு இருப்பது திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.