close
Choose your channels

அட்லி குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்.. என்ன சொல்லி வாழ்த்தி இருக்கார் பாருங்க?

Saturday, February 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் அட்லி மற்றும் ப்ரியா அட்லி தம்பதிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையை ஷாருக்கான் நேரில் பார்த்து குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாக உள்ளன.

இயக்குனர் அட்லி மற்றும் ப்ரியா அட்லி ஆகிய இருவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனை அவர்கள் தங்களது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்த நிலையில் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஷாருக்கான் சமீபத்தில் ரசிகர்களிடம் சமூக வலைதளத்தில் பேசியபோது அட்லீக் குழந்தையை நீங்கள் நேரில் பார்த்தீர்களா? என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஷாருக்கான், ‘ஆம் அட்லி குழந்தையை நேரில் பார்த்தேன், அந்த குழந்தை மிகவும் அழகாகவும் இனிமையாகவும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ’ஜவான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையில் உருவாக்கி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.