'தலைவர் 171' திரைப்படத்தில் நடிக்க முடியாது என கூறிய ஷாருக்கான்.. இதுதான் காரணம்..!

  • IndiaGlitz, [Sunday,December 17 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 171’ திரைப்படத்தில் ஏற்கனவே சிவகார்த்திகேயன் உள்பட ஒரு சில பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்க ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் ஷாருக்கான் இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் ’தலைவர் 171’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் குறிப்பாக நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஷாருக்கான் இடம் லோகேஷ் கனகராஜ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது தனக்கு மிகுந்த மதிப்பு, மரியாதை உண்டு என்றும், ஆனால் அதே நேரத்தில் சிறப்பு தோற்றங்களில் ஏராளமான படங்களில் நடித்து விட்டதால் மீண்டும் ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என்று ஷாருக்கான் கூறிவிட்டதாகவும் தெரிகிறது.

இதையடுத்து அதே கேரக்டருக்காக ரன்வீர்சிங் இடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் ரன்வீர் சிங் நடிக்க ஒப்புக் கொண்டாலும் இந்த படத்தின் முழு கதையையும் தான் கேட்க வேண்டும் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. ரன்வீர்சிங் இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.