close
Choose your channels

அன்னையர் தின போட்டோஷூட்டில் ஷகிலா-மிளா: வேற லெவல் என ரசிகர்கள் பாராட்டு

Sunday, May 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை ஷகிலா, ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் அனைவரும் அவரை ’அம்மா’ என்று கூப்பிடும் அளவிற்கு இமேஜ் உயர்ந்துவிட்டார். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களும் சரி, கோமாளிகளும் சரி, ஏன் நடுவர்களும் சரி, ரசிகர்களும் சரி ’ஷகிலா அம்மா’ என்றே அழைத்து வருவது அவருக்கு மிகப்பெரிய பெருமையான ஒன்றாகவே கருதப்படுகிறது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஷகிலா இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படத்தில் ஷகிலா மேனகா போன்றும், அவரது மகள் மிளா சகுந்தலை போன்றும் இருக்கும் வகையில் பக்காவாக காஸ்ட்யூம் மேக்கப் போடப்பட்டு போட்டோஷூட் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் புராணத்தில் உள்ள மேனகை-சகுந்தலை போன்றே ஷகிலாவும் அவருடைய மகள் மிளாவும் வேற லெவலில் இருக்கின்றார்கள் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பதும் கமெண்ட்ஸ்கள், லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.