close
Choose your channels

ஸ்லிம் ஆக மாறிய ஷாலினி பாண்டே: ரசிகர்கள் அதிருப்தி

Friday, March 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் தேவரகொண்டா நடித்த ’அர்ஜுன் ரெட்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. அந்த திரைப்படம் தமிழ் உட்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டாலும் ஷாலினி அளவுக்கு வேறு எந்த நடிகையும் அந்த கேரக்டருக்கு பொருந்தவும் இல்லை அவரளவுக்கு நடிக்கவும் இல்லை என்பதே ரசிகர்களின் எண்ணமாக இருந்தது.

இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் கீர்த்தி சுரேஷின் ’நடிகையர் திலகம்’, ஜிவி பிரகாஷின் ’100% காதல்’ ஜீவாவின் ’கொரில்லா’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் சில தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இரண்டு இந்திப் படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபகாலமாக உடல் எடையை குறைத்துக் கொண்டே வந்த ஷாலினி பாண்டே திடீரென ஒல்லியாக மாறிய புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். பொதுவாக நடிகைகளை ஒல்லியாக பார்க்கவே ரசிகர்கள் விரும்புவார்கள். ஆனால் ஷாலினியை குண்டாக பார்த்து பழகிவிட்டு திடீரென ஒல்லியாக பார்த்து ரசிகர்கள் சிலர் அதிருப்தி அடைந்துள்ளார். மீண்டும் நீங்கள் பழைய தோற்றத்திற்கு மாறுங்கள் என்றும், குண்டா வரச்சொல்லுங்கள் என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.