close
Choose your channels

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய ஷாலினி அஜித்தின் தங்கை ஷாம்லி.. வைரல் வீடியோ

Thursday, January 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஷாலினி அஜித்தின் சகோதரி ஷாமிலி வித்தியாசமான லுக்கில் இருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஷாலினி அஜீத்தின் சகோதரி ஷாம்லி மூன்று வயதிலேயே மணிரத்னம் இயக்கிய ’அஞ்சலி’ திரைப்படத்தில் நடித்தவர் என்பதும் அந்த படத்திற்காக அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில் ஒரு சில படங்களில் ஹீரோயினியாகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஷாலினி அஜீத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது அவருடைய புகைப்படங்கள் வெளியாகி வரும் என்பதும் ஆயிரக்கணக்கானோர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்து வருகிறார்கள் என்று தெரிந்ததே.

இந்த நிலையில் புத்தாண்டு தினத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள வீடியோவில் வித்தியாசமான லுக்கில் காணப்படுகிறார். ஹேர் கலரிங் மாற்றி மாடர்ன் உடையில் அவர் இருக்கும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ஷாலினி அஜீத்தின் தங்கை ஷாம்லியா இவர்? என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் இந்த வீடியோவை லைக் செய்து வருகின்றனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.