பைக்கில் செம்ம ஸ்டைலில் உட்கார்ந்திருக்கும் ஷாலினி.. அஜித்தின் பிறந்த நாள் புகைப்படங்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் அஜித் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி பல அரசியல்வாதிகளும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அஜித்தின் மனைவி ஷாலினி தனது Instagram பக்கத்தில் அஜித்தின் பிறந்த நாள் வாழ்த்து புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். 2024ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடிய போது எடுக்கப்பட்ட இந்த படங்கள் "எப்போதுமே ஞாபகத்தில் இருக்கும்" என்று ஷாலினி குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் ஷாலினி அசத்தலான ஸ்டைலில் பைக்கில் உட்கார்ந்திருப்பதையும், அவரது பின்னால் அஜித் உட்கார்ந்திருப்பதையும் காணலாம். மேலும், குடும்பத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரத்திலேயே கிட்டத்தட்ட 4 லட்சம் லைக்ஸ் குவிந்துள்ளன என்பதும், இதில் லைக் செய்தவர்களில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments