தொடங்கிவிட்டது ஷங்கரின் அடுத்தபடம்: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Tuesday,September 07 2021]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடிக்கும் திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் செப்டம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஷங்கர் மற்றும் ராம்சரண் தேஜா இணையும் படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ள நிலையில் இன்று அன்னபூர்ணா ஸ்டூடியோவில் போட்டோஷூட் பணிகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த போட்டோஷூட்டில் ராம்சரண் தேஜா, ஷங்கர் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ராம்சரண் தேஜா ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை முதல் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் ’இந்தியன் 2’ படத்திற்கு ஷங்கர் திரும்புவார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சுபாஷ்கரன் மற்றும் ஷங்கர் இடையே உடன்பாடு ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து ராம்சரண் தேஜா படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு ’இந்தியன் 2’ படத்திற்கு ஷங்கர் திரும்புவார் என்றும் ’இந்தியன் 2’படத்தை முடித்துவிட்டு அதன் பின்னர் மீண்டும் ராம் சரண் தேஜா நடிக்கும் படத்துக்கு செல்வார் என்றும் கூறப்படுகிறது.