close
Choose your channels

'96' படத்திற்காக த்ரிஷாவுக்கு கிடைத்த பிரமாண்டமான வாழ்த்து

Monday, October 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான '96' திரைப்படத்தை பார்த்த ஒவ்வொரு ரசிகரையும் அவரவர்களுடைய மலரும் நினைவுகளை ஞாபகப்படுத்தியது. ஒரு காதல் கதையை இதைவிட அற்புதமாகவும் டீசண்ட்டாகவும் எடுக்க வாய்ப்பில்லை என்ற அளவிற்கு இந்த படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

'96' திரைப்படத்தில் நடித்த விஜய்சேதுபதி, த்ரிஷாவுக்கு ரசிகர்கள், பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை பாராட்டியுள்ளார். ஷங்கர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த படம் குறித்து கூறியதாவது:

இந்த படம் கிட்டத்தட்ட எல்லோருடைய வாழ்க்கையிலும் சம்பந்தப்பட்டுள்ளது. அதுதான் இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ். விஜய்சேதுபதி மிக அருமையாக நடித்துள்ளார். த்ரிஷாவை திரையில் பார்க்கும்போதே மகிழ்ச்சி ஏற்படுகிறது. இயக்குனர் பிரேம்குமாருக்கு எனது வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார். அதேபோல் சமீபத்தில் வந்த இன்னொரு படமான 'ராட்சசன்' திரைப்படத்தின் குழுவினர்களுக்கு குறிப்பாக இயக்குனர் ராம்குமாருக்கு தனது வாழ்த்துக்களை ஷங்கர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.