close
Choose your channels

ஷங்கர் மகளுக்கு 2வது திருமணம்.. அதிதி வெளியிட்ட நிச்சயதார்த்த புகைப்படம்..!

Sunday, February 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் ஆறு மாதங்கள் கூட கணவருடன் அவர் வாழவில்லை என்றும் சில பிரச்சினைகள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்று அவரது சகோதரி அதிதி ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு உள்ள நிலையில் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

ஐஸ்வர்யா மற்றும் அவருடைய வருங்கால மாப்பிள்ளை புகைப்படத்தை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஐஸ்வர்யாவுக்கு கணவராக வரப்போகிறவர் உதவி இயக்குனராக இருக்கும் தருண் கார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது. திருமண நாள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷங்கர் மகளின் முதல் கணவர் ரோஹித் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் அதன்பின் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்ததால் ஐஸ்வர்யா தனது கணவரை பிரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos