மீண்டும் புத்துயிர் பெறும் 'இந்தியன் 2': ரிலீஸ் தேதியும் முடிவு செய்யப்பட்டது!

  • IndiaGlitz, [Thursday,May 16 2019]

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த 'இந்தியன் 2' திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்த நிலையில் இந்த படத்தை லைகா நிறுவனம் திடீரென டிராப் செய்துவிட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து இந்த படத்தை ரிலையன்ஸ் அல்லது சன்பிக்சர்ஸ் நிறுவனங்களில் ஒன்று தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி மீண்டும் லைகா நிறுவனமே இந்த படத்தை தொடரவுள்ளதாகவும், ஷங்கருக்கும் நிறுவனத்திற்கும் இருந்த கருத்துவேறுபாடுகள் பேசி சரிசெய்யப்பட்டிருப்பதாகவும், 2021 பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்யும் வகையில் இந்த படத்தை முடித்து கொடுக்க ஷங்கர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது

இருப்பினும் கமல்ஹாசன் தற்போது 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளதால் இன்னும் மூன்று மாதம் கழித்தே கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் என்றும் அதுவரை இந்த படத்தின் மற்ற காட்சிகளை படமாக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

More News

'தளபதி 63' பாடல் படப்பிடிப்பு குறித்த தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் 63வது படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை வரும் ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும்

மீண்டும் ஒரு திகில் படத்தில் கமிட் ஆன ஹன்சிகா!

அரண்மனை, அரண்மனை 2 ஆகிய திகில் படங்களில் நடித்த நடிகை ஹன்சிகா தற்போது அவரது 50வது படமான 'மஹா' என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார்

கமல்ஹாசன் பிரச்சாரக் கூட்டத்தில் காலணி வீச்சு

சமீபத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் இந்து தீவிரவாதி குறித்து கமல் பேசிய சர்ச்சைக்கருத்து குறித்து பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்

'தர்பார்' படம் குறித்து லைகாவின் முக்கிய அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'தர்பார்' திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

தனுஷை நேசிக்கும் ஸ்பெயின் ரசிகர்கள்: இயக்குனர் பாராட்டு

தனுஷ் நடித்த திரைப்படமான 'The Extraordinary Journey Of The Fakir' என்ற திரைப்படம் இன்னும் இந்தியாவில் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் பிரான்ஸ், ரஷ்யா, உள்பட பல நாடுகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.