ஜூலை 21ல் வெளியாகும் ஷங்கரின் அடுத்த படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,July 01 2023]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ’கேம் சேஞ்சர்’ மற்றும் ’இந்தியன் 2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் அவருடைய எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் திரைப்படம் ஒன்றின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ மற்றும் ராம்சரண் ராஜா நடிப்பில் உருவாகி வரும் ’கேம் சேஞ்சர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களை மாறி மாறி ஷங்கர் இயக்கி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ஷங்கரின் உதவியாளர்களில் ஒருவர் வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அநீதி’ என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'அநீதி’ படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வரும் ஜூலை 21 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமையை எல்மா பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் காளி வெங்கட் , வனிதா, சாரா அர்ஜுன் உட்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

செம உற்சாகம்… பார்டிக்கு ரெடியான நடிகை கங்கனா ரனாவத்… காரணம் இதுதான்?

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பை தவிர, இயக்குநர், தயாரிப்பாளர் அவதாரதங்களை எடுத்துள்ளார்

சிவகார்த்திகேயன் - ஏஆர் முருகதாஸ் படத்தில் இணைந்த 2 பிரபலங்கள்: வேற லெவல் எதிர்பார்ப்பு..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கப் போகிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது அந்த செய்தி கிட்டத்தட்ட உறுதி

12 வயதில் மகன் இருக்கும் நிலையில் சீரியல் நடிகை கர்ப்பம்.. ரசிகர்கள் வாழ்த்து..!

தொலைக்காட்சி சீரியல் நடிகை ஒருவருக்கு 12 வயதில் மகன் இருக்கும் நிலையில் தற்போது அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

'லியோ' பாடலுக்கு டான்ஸ் ஆடிய மன்சூர் அலிகான்.. அபராதம் விதிக்க நெட்டிசன்கள் கோரிக்கை..!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' படத்தில் இடம்பெற்ற 'நா ரெடி' என்ற பாடலுக்கு காரில் சென்று கொண்டிருக்கும்போதே டான்ஸ் ஆடிய மன்சூர் அலிகானுக்கு அபராதம் விதிக்க வேண்டும்

நியூயார்க்கின் உயரமான கட்டிடத்தில் செம்ம கிளாமர்.. சீரியல் நடிகையின் போட்டோஷூட்..!

நியூயார்க்கின் உயரமான கட்டிடத்தில் இருந்து செம கிளாமர் உடையில் போட்டோஷூட் எடுத்த டிவி சீரியல் நடிகையின் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள்