close
Choose your channels

நாளை திருமணம் என்ற நிலையில் திடீர் டுவிஸ்ட்.. ஷங்கர் பட நடிகையின் திருமண தேதி மாற்றம்..!

Sunday, February 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்துவரும் நடிகையின் திருமணம் நாளை நடைபெற இருந்த நிலையில் தற்போது திடீரென திருமண தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடித்து வரும் திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருபவர் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி. இவர் பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பிப்ரவரி 6ஆம் தேதி திருமணம் செய்ய இருதரப்பு பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

இதனை அடுத்து திருமணம் நடைபெற இருக்கும் ராஜஸ்தானில் உள்ள அரண்மனைக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் குவிந்து வருகின்றனர். பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி கூட இந்த திருமணத்திற்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென பிப்ரவரி 6ஆம் தேதி திருமணம் இல்லை என்றும் திருமண தேதி பிப்ரவரி 7ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று மெகந்தி நிகழ்ச்சியும் நாளை சங்கீத நிகழ்ச்சியும் நடைபெறும் என்றும் பிப்ரவரி 7ஆம் தேதி தான் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.