கர்ப்பமானதால் பிரபல நடிகரின் படத்தில் இருந்து விலகிய ஷங்கர் பட நாயகி.. அவருக்கு பதில் யார்?


Send us your feedback to audioarticles@vaarta.com


ஷங்கர் படத்தில் நாயகியாக நடித்த நடிகை, பிரபல நடிகரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில், தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதால் அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இன்னொரு பிரபல நடிகை அந்த படத்தில் நடிக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
ஷாருக்கான் நடிப்பில் உருவான 'டான்' மற்றும் ’டான் 2’ ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வசூலை பெற்ற நிலையில், தற்போது 'டான் 3' திரைப்படம் உருவாகவுள்ளது. இதில் ரன்வீர் சிங் நடிக்க இருக்கும் நிலையில், இந்த படத்தின் நாயகியாக நடிக்க ஷங்கர் இயக்கத்தில் உருவான ’கேம் சேஞ்சர்’ உள்பட பல வெற்றி படங்களில் நடித்த கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், அவர் கடந்த பிப்ரவரி மாதம் கர்ப்பமானதை அடுத்து இந்த படத்தில் இருந்து விலகினார்.
இதனை அடுத்து சில பாலிவுட் நடிகைகள் இந்த படத்தில் நடிக்க பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், க்ரீத்தி சனோன் உள்பட சில தென்னிந்திய நடிகைகளும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தற்போது க்ரீத்தி சனோன் நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தனுஷ் நடித்து வரும் 'தேரே இஷ்க் மெய்ன்' உள்பட சில படங்களில் நடித்து வரும் க்ரீத்தி சனோன் ’டான் 3’ படத்தில் நடிக்க இருப்பதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments