15 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட பாடல்.. இணையத்தில் லீக் ஆனதால் ஷங்கர் அதிர்ச்சி..!

  • IndiaGlitz, [Saturday,September 16 2023]

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் 15 கோடி ரூபாய் செலவில் ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட்ட நிலையில் அந்த பாடல் கட்சியின் சில பகுதிகள் இணையத்தில் லீக் ஆகி உள்ளதை அடுத்து ஷங்கர் உட்பட படக்குழுவினர் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுவது.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’கேம் சேஞ்சர்’. ராம்சரண் தேஜா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்றது. ரூ.15 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த பாடல் காட்சிகளின் சில பகுதிகள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் லீக் ஆன காட்சிகள் ரிகர்சல் செய்த போது எடுக்கப்பட்டது தான் என்றும் ஒரிஜினல் காட்சி இல்லை என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் ஒரு பாடல் காட்சியின் பெரும்பாலான பகுதி லீக் ஆகி இருப்பதை அடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை ’கேம் சேஞ்சர்’ படக்குழுவினர் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

தில் ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் ’கேம் சேஞ்சர்’ படத்தில் ராம்சரண் தேஜா, கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரகனி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் கதையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவில் சமீர் முகமது படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

'தலைவர் 170' கேரளாவில் நடக்கும் கதையா? லைகாவின் அதிரடி விளம்பரம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் 'ஜெய்பீம்' ஞானவேல் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தலைவர் 170' என்ற படத்தில்

ஒரே ஆண்டில் மூன்று ரூ.1000 கோடி படங்களா? ஷாருக்கானுக்கு எகிறும் மார்க்கெட்..!

இந்த ஆண்டு ஷாருக்கான் நடித்த 'பதான்' திரைப்படம்  கடந்த  ஜனவரி மாதம் வெளியான நிலையில் சமீபத்தில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' திரைப்படம் வெளியானது. இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி

விஜய்யின் அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் ஏன்? மோடி நடவடிக்கையால் சுறுசுறுப்பானாரா?

தளபதி விஜய் விரைவில் அரசியலில் குதிக்க போகிறார் என்று கூறப்படும் நிலையில் அதற்கு ஏற்றவாறு அவர் தனது காய்களையும் நகர்த்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 10ஆம் வகுப்பு,

அது முற்றிலும் பொய்.. அந்த சகோதரி மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன்: விஜய் ஆண்டனி..!

தன்னை பற்றி வதந்தி பரப்பிய சகோதரி மீது வாழ நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன் என நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள

நெட் டிரஸ்ஸில் வாணி போஜன்.. வேற லெவல் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

நடிகை வாணி போஜன் வலை போன்ற நெட் டிரஸ்ஸில் வேற லெவலில் போஸ் கொடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.