'மாவீரன்' படத்தின் மகள் அதிதி நடிப்பு.. ஷங்கர் என்ன சொன்னார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,July 15 2023]

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின் நடிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான ’மாவீரன்’ திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதை பார்த்தோம்.

இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியை பல திரையுலக பிரபலங்கள் பார்த்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் ஷங்கர், நேற்று இந்த படத்தை பார்த்த நிலையில் தற்போது அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

இயக்குனர் மடோன் அஸ்வின் புத்திசாலித்தனமான எழுதப்பட்ட திரைக்கதையில் ’மாவீரன்’ படம் கம்பீரமாக உள்ளது. பொழுதுபோக்கு மற்றும் அற்புதமான நகைச்சுவை உணர்வை அவர் திரைக்கதையில் மிகச் சரியாக புகுத்தியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. அதிதி தனக்கு கொடுக்கப்பட்டதை நன்றாக செய்து உள்ளார். சரிதா, யோகி பாபு, மிஷ்கின் ஆகியோர் சிறப்பாக தங்கள் கேரக்டரில் நடித்துள்ளனர்.

ஆக்சன் காட்சிகள் மற்றும் நடனம் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. இந்த படத்திற்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள். குடும்பத்துடன் பார்த்தால் நிச்சயமாக ஒரு புதிய அனுபவத்தை பெற முடியும். இவ்வாறு ஷங்கர் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளதை அடுத்து படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More News

'டைரி' இயக்குனரின் அடுத்த பட அறிவிப்பு.. பிரபல நடிகரின் சகோதரர் ஹீரோவாக அறிமுகம்..!

அருள்நிதி நடித்த 'டைரி' என்ற திரைப்படத்தின் இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில்

மாவீரனுக்கு குரல் கொடுத்த விஜய்சேதுபதிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? கோலிவுட் ஆச்சரியம்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் முதல் நாளே 9 கோடி ரூபாய் வசூல்

தயாரிப்பாளர் என்னை ஹோட்டலில் தங்கச் சொன்னார்? மோசமான சம்பவத்தை பகிர்ந்த பிரபல நடிகை!

சினிமா துறையில் ஏற்கனவே காஸ்டிங் கவுச் பிரச்சனையை சில இளம் நடிகைகள் சந்தித்து வருவதாக புகார் கூறப்பட்டு வந்தது. இந்த பிரச்சனை ‘மீடூ’

விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்… தக்காளி விற்று ஒரே வாரத்தில் கோடீஸ்வரர் ஆன அதிசயம்

இந்தியா முழுக்கவே தக்காளியின் விலை கடந்த சில தினங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

பிக்பாஸ் அமீர் பிறந்தநாள்.. உருகி உருகி வாழ்த்து தெரிவித்த பாவனி ரெட்டி..!

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர் மற்றும் பாவனி ரெட்டி ஆகிய இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் நிறுவனம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படும்