ஒரே ஒரு காட்சிக்காக ரூ.10 கோடி செலவு செய்தாரா ஷங்கர்? 

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா நடித்து வரும் திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு காட்சிக்காக ரூபாய் 10 கோடி அவர் செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் என்பதும் அவரது படங்கள் பட்ஜெட் மிக அதிகமாக இருக்கும் என்பதும் தெரிந்ததே. ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் என்ற படத்தில் ஒரே ஒரு பாடலுக்காக உலகில் உள்ள ஏழு அதிசயங்கள் இருக்கும் நாடுகளுக்கு சென்று படமாக்கியவர் என்பதும் அவரது படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் மிகவும் பிரமாண்டமாகவும் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு இருப்பதால் தான் இன்றளவுக்கும் அவரது படங்கள் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது ராம் சரண் தேஜா இயக்கத்தில் உருவாகி நடிப்பில் உருவாகி வரும் ’ஆர்சி 15’ என்ற திரைப்படத்தின் ஒரு ஸ்டண்ட் காட்சிக்காக ரூபாய் 10 கோடி ரூபாய் செலவு பிரமாண்டமாக படமாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு சில நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றும் இந்த காட்சிக்காக அவர் 10 கோடி ரூபாய் செலவு செய்து மிகவும் பிரமாண்டமாக இந்த ஸ்டண்ட் காட்சியை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ராம்சரண் தேஜா ஜோடியாக கைரா அத்வானி நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார் என்பதும் தெரிந்ததே. ஸ்ரீவெங்கடேஸ்வரா புரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

More News

நீருக்கடியில் ரொமான்ஸ்: வீடியோ வெளியிட்ட விஜய் டிவி விஜே!

விஜய் டிவி விஜே தனது கணவருடன் நெருக்கடியான நேரத்தில் ரொமான்ஸ் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

லண்டனில் அக்சராஹாசன்: வைரல் புகைப்படங்கள்!

அஜித் நடித்த 'விவேகம்' விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள உலகநாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் தற்போது லண்டனில் இருக்கும்

'முடிஞ்சா தொட்டுப்பாரு': 'வலிமை' படத்தின் மாஸ் புரமோ வீடியோ

அஜித் நடித்த 'வலிமை'  திரைப்படம் வரும் 24ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

ஐபிஎல் விளையாட இருக்கும் மகன்… முதல்முறையாக மவுன் கலைத்த சச்சின்!

நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் சச்சினை மும்பை இந்தியன்ஸ்

ஒரு சீனுக்காக 17 முறை காரில் அடிப்பட்டேன்… பிரபல நடிகரின் த்ரில் அனுபவம்!

சமீபத்தில் வெளியான “ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்“ ஹாலிவுட் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு உலகம் முழுவதும்