தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனுக்கு நன்றி தெரிவித்த ஷங்கர்.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Friday,August 18 2023]

தன்னை இயக்குனராக அறிமுகம் செய்த பிரபல தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனுக்கு நன்றி தெரிவித்து ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் உருவான ’ஜென்டில்மேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் ஷங்கர் இயக்குனர் ஆக அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் உருவான ‘காதலன்’ என்ற திரைப்படத்தை ஷங்கர் இயக்கினார்.

இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே கே.டி.குஞ்சுமோன் - ஷங்கர் இடையே மன வருத்தம் ஏற்பட்டதாகவும் இதனால் இருவரும் அதன் பிறகு மீண்டும் இணையவில்லை என்றும் கூறப்பட்டது

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வகையில் கே.டி.குஞ்சுமோனும் தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனர் ஷங்கருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து ’கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்’ என்று கூறினார். இதற்கு ’நன்றி கே.டி.குஞ்சுமோன் சார்’ என்று ஷங்கர் பதில் அளித்துள்ளார்.

More News

கிருத்திகா உதயநிதியின் அடுத்த படத்தில் இந்த பிரபல நடிகரா? மாஸ் தகவல்..!

 கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான 'பேப்பர் ராக்கெட்' என்ற வெப் தொடர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. 

சென்னையில் 'ஜவான்' புரமோஷன் நிகழ்ச்சி.. தளபதி விஜய் கலந்து கொள்கிறாரா?

ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில், அட்லி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்க

மழையால் தள்ளிப்போன 'மறக்குமா நெஞ்சம்': புதிய தேதியை அறிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்..!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்த இருந்த 'மறக்குமா நெஞ்சம்' என்ற நிகழ்ச்சி சமீபத்தில் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய தேதியை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில்

கோடியில் சம்பாதிப்பவர்களுக்கு கூட இல்லாத மனது.. விஜய் டிவி பாலாவின் நெகிழ்ச்சியான உதவி..!

கோடியில் சம்பாதிப்பவர்கள் கூட செய்யாத உதவியை ஒரு சில லட்சங்களை சம்பாதிக்கும் பாலா செய்து கொடுத்ததை அடுத்து அவருடைய நெகிழ்ச்சியான உதவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கீர்த்தி சுரேஷுக்கு பைக் ஓட்ட கற்று கொடுக்கும் உதயநிதி.. வைரல் வீடியோ..!

உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்னன்' திரைப்படத்தின் 50 ஆவது வெற்றி விழா நேற்று நடந்த நிலையில் இதில் பட குழுவினர்