விறுவிறுப்பாக அழைப்பிதழ் கொடுக்கும் ஷங்கர்: 2வது மகள் அதிதிக்கு திருமணமா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வருவதால் அவரது இரண்டாவது மகளுக்கு திருமணம் என்ற வதந்தி இணையதளங்களில் பரவி வருகிறது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் கிரிக்கெட் வீரர் ரோகித்துக்கும் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இந்தத் திருமணம் ஊரடங்கு நேரத்தில் நடந்ததால் மிகவும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது மூத்த மகள் ஐஸ்வர்யா திருமண வரவேற்பு நடத்த ஷங்கர் திட்டமிட்டு உள்ளதாகவும் அதற்காக தான் அவர் நெருங்கிய உறவினர்களுக்கும் திரையுலக நண்பர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதனை வைத்து அவரது இரண்டாவது மகள் அதிதிக்கு திருமணம் என தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும் அதில் எந்தவித உண்மையும் இல்லை ஷங்கர் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். ஷங்கரின் மூத்த மகள் திருமண வரவேற்பு மே 1ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

ஷங்கரின் 2வது மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவான ‘விருமன்’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜித், விஜய்யை அடுத்து கமலுடன் இணையும் உதயநிதி?

அஜித் நடித்த 'வலிமை' மற்றும் விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படங்களை தமிழகத்தில் ரிலீஸ் செய்த உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கமல்ஹாசனின் அடுத்த படத்தையும்

என் அம்மா 27 வருஷமா பொய் சொல்லிட்டாங்க… செல்லமாக கோபப்பட்ட முக்கிய வீரர்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாகவும் முன்னணி பேட்ஸ்மேனாகவும் இருந்துவரும் கே.எல்.ராகுல் தனக்கு பெயர்

பிரபல நடிகரின் அட்டாக் சேலஞ்சை ஏற்று கொண்ட சமந்தா: வைரல் வீடியோ

 பிரபல நடிகரின் அட்டாக் சேலஞ்சை ஏற்றுக்கொண்ட நடிகை சமந்தாவின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சில்வர் ஜூப்ளி ஸ்டார் மோகனின் 'ஹரா' படத்தின் முக்கிய அறிவிப்ப்பு!

கடந்த 90களில் பல சூப்பர் ஹிட் ரொமான்ஸ் படங்களில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் மோகன், நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது 'ஹரா' என்ற படத்தில் நடித்து வருகிறார்

'தளபதி 66' நாயகி பட்டியலில் இணைந்த 'தோனி' பட நாயகி!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2வது வாரம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நாயகி குறித்த தகவல்கள்