close
Choose your channels

சண்முகப்பாண்டியனின் ஜல்லிக்கட்டுக்கு விரைவில் தேதி குறிப்பு

Friday, September 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேப்டன் விஜயகாந்தின் கலையுலக வாரிசு சண்முகப்பாண்டியன் நடித்து வரும் 'மதுரவீரன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றதாகவும், இன்னும் ஒருசில நாட்களில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கப்படும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

விஜயகாந்தின் எந்த தலையீடும் இல்லாமல் இயக்குனர் பி.ஜி. முத்தையா இயக்கிய இந்த படம் மண்ணின் மணத்துடன் உருவாகியுள்ளதாகவும், குறிப்பாக இந்த படத்தின் ஜல்லிக்கட்டு காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சண்முகப்பாண்டியன், மீனாட்சி, சமுத்திரக்கனி, வேலராமமூர்த்தி, பாலசரவணன், ஜி.மாரிமுத்து, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்து வருகிறார். இவர் ஏற்கனவே இனிமே இப்படித்தான், கட்டப்பாவை காணோம் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இயக்குனர் பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவில், ப்ரவீண் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வி ஸ்டுடியோஸ் மற்றும் பிஜி மீடியா ஒர்க்ஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. இந்த படத்தின் இசை வெளியீட்டு, ரிலீஸ் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.