close
Choose your channels

மணிரத்னம் படத்தில் இணைந்த சாந்தனு பாக்யராஜ்

Friday, July 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' என்ற திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அவர் தற்போது 'வானம் கொட்டட்டும்' என்ற படத்தை தனது மெட்ராஸ் டாக்கீஸ் பேனரில் தயாரித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

'வானம் கொட்டட்டும் படத்தை மணிரத்னம் அவர்களின் உதவியாளர் தனசேகரன் என்பவர் இயக்கவுள்ளார். விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் தற்போது புதியதாக சாந்தனு பாக்கியராஜ் இணைந்துள்ளார். இவருக்கு இந்த படத்தில் முக்கிய கேரக்டர் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

மணிரத்னம் கதை திரைக்கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. '96' பட புகழ் கோவிந்த் வசந்தா இசையில் உருவாகும் இந்த படத்தில் ப்ரீத்தா என்பவர் ஒளிப்பதிவாளராக பணி செய்கிறார். இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சரத்குமார் - ராதிகா ஜோடி இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.