close
Choose your channels

சிஎஸ்கே மேட்ச் பார்க்க தோனி அறையை புக் செய்த தமிழ் நடிகர்!

Monday, September 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் தொடங்கியது என்பதும் முதல் போட்டியில் அட்டகாசமாக விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் பிரமுகர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தை ரசித்து பார்த்துள்ளனர். குறிப்பாக நடிகர் சாந்தனு தனது மனைவியுடன் சென்னையில் உள்ள ஸ்டார் ஓட்டலில் தங்கி அங்குள்ள டிவி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டியை பார்த்து ரசித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் போட்டியில் விளையாடும் போது சிஎஸ்கே அணியினர் வழக்கமாக ஒரு ஸ்டார் ஓட்டலில் தங்குவார்கள் என்பதும், அதிலும் குறிப்பாக தோனிக்காக என ஸ்பெஷல் அறை ஒதுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அறையில்தான் சாந்தனு மற்றும் அவரது மனைவி தங்கியிருந்து சிஎஸ்கே மேட்ச் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் தோனியின் மீது சாந்தனுவுக்கு உள்ள வெறி தரமான பாசத்தை உணர்த்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.