ஹீரோவாகும் மற்றொரு பிக்பாஸ் போட்டியாளர்

  • IndiaGlitz, [Friday,December 07 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் திரைத்துறையில் வாய்ப்புகள் பெற்று ஜொலித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக ஹரிஷ் கல்யாண், ஆரவ், மகத், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா, ஜூலி ஆகியோர் தற்போது திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஷாரிக் ஹீரோவாகியுள்ளார். அவர் நடிக்கவுள்ள படத்தின் டைட்டில் 'உக்ரம்' என்பதும் இந்த படத்தை 'அட்டு' படத்தை இயக்கிய ரத்தின்லிங்கா இயக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷாரிக் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மிஸ் குளோபல் பட்டம் பெற்ற மாடல் அழகி அர்ச்சனா ரவி நடிக்கிறார். வில்லனாக மலேசிய சிவா அறிமுகமாகிறார்.

சஸ்பென்ஸ் ஆக்ஷன் த்ரில்லராகப் படம் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. துரை K.C. ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு வெங்கட், இசையமைக்கின்றார்.

More News

'விஸ்வாசம்' படத்தின் புதிய அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்

வரும் பொங்கல் தினத்தன்று ரஜினியின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் வெளிவரவுள்ளது

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் திடீர் மாயம்: நடந்தது என்ன?

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை திடீரென காணவில்லை என அவரது மனைவி சென்னை அண்ணா நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்து அதன் பின் சிலமணி நேரங்களில் புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உன்னை வெல்ல யாரும் இந்த மண்ணில் இல்லை: 'கனா' பாடல் விமர்சனம்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' திரைப்படம் வரும் 21ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை நாளில் வெளியாகவுள்ள நிலையில்

ஒரே வாரத்தில் 5 படங்கள்: காற்றில் பறக்கவிடப்பட்ட விதிமுறைகள்

சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் விதிக்கப்பட்ட விதிகளில் ஒன்று ஒவ்வொரு வாரமும் திரைப்பட வெளியிட்டு குழுவின் அனுமதி பெற்று 3 அல்லது 4 படங்கள் மட்டுமே வெளியாகும்

சென்னை பெண்கள் விடுதியில் ரகசிய கேமிரா: உரிமையாளர் கைது

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் அந்த விடுதியின் உரிமையாளர் ரகசிய கேமிரா வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.