close
Choose your channels

ராகுல்காந்தியை சந்தித்த பிரபல நடிகர்! காங்கிரஸில் இணைய திட்டம்

Thursday, March 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகரும் பாஜக பிரமுகருமான சத்ருஹன்சின்ஹா, கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் இருந்தாலும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சத்ருஹன்சின்ஹா சந்தித்தார்.

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சத்ருஹன்சின்ஹா, வரும் ஏப்ரல் 6ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் அதற்கு முன்னர் மரியாதை நிமித்தமாக ராகுல்காந்தியை சந்தித்ததாகவும் தெரிவித்தார்.

நடிகர் சத்ருஹன்சின்ஹா, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக பணியாற்றியவர் . மேலும் கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலில் பிகார் மாநிலத்தில் பாட்னா தொகுதியில் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட நடிகர் சேகர் சுமனை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சத்ருஹன்சின்ஹாவின் மகள் சோனாக்சி சின்ஹா பாலிவுட்டில் பிரபல நடிகை என்பதும் இவர் தமிழில் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' படத்தின் நாயகிகளில் ஒருவர் என்பதும் தெரிந்ததே
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.