10 கிலோ குறைந்த எடை: ஸ்லிம்மாக மாறியதன் ரகசியத்தை சொல்லும் ஷெரின்

தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதன்பின்னர் ‘விசில்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த ஷெரின் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஷெரினுக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்த நிலையில் மீண்டும் திரையுலகில் ஒரு ரவுண்டு வருவதற்காக காத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது உடல் எடை அதிகமாக இருந்த ஷெரின், தற்போது ஆச்சரியப்படும் வகையில் 10 கிலோ எடை குறைந்து காணப்படுகிறார். கிட்டத்தட்ட ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானது போலவே தோற்றமளிக்கும் ஷெரின் இதுகுறித்து கூறியபோது, ‘ஒரே வருடத்தில் 10 கிலோ எடை குறைந்து தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். எனது தோற்றத்தை பார்க்கும்போது எனக்கே மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது

உடல் எடை குறைப்பது என்பது மிகவும் எளிதானது. மற்றவர்களை புண்படுத்தும் வகையிலான வார்த்தைகளை நாம் பயன்படுத்தாமல் மகிழ்ச்சியாக இருந்தாலே போதும். நீங்கள் பேசும் வார்த்தையினால் உங்கள் எதிரில் உள்ளவர்கள் புன்னகைக்க வேண்டுமா? அல்லது கண்ணீர் சிந்த வேண்டுமா? என்பதை நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

உடல் எடையை குறைக்க மணிக்கணக்கில், நாட்கணக்கில் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பவர்கள் மத்தியில் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டாலே போதும் உடல் எடை குறைந்துவிடும் என்ற கோணத்தில் ஷெரின் கூறியது மிகவும் வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். ஷெரினின் இந்த கொள்கையை அனைவரும் பின்பற்றினால் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமின்றி உலகில் பாசிட்டிவிட்டி அதிகரிக்கும் என்றும் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
 

More News

வந்துவிட்டது... 2020 இன் அடுத்த வைரஸ் பெருந்தொற்று!!! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!!

கொரோனா, ஸ்வைன் ஃப்ளூவை தொடர்ந்து 24 மணி நேரத்தில் மனிதர்களைக் கொல்லக்கூடிய மற்றொரு நோய்த்தொற்று சீனாவில் பரவி வருவதாகத் தற்போது பரபரப்பு செய்தி வெளியாகி இருக்கிறது.

லண்டன் To கொல்கத்தாவுக்கு பஸ்ஸில டிராவலா??? தலைச் சுற்ற வைக்கும் ஆச்சர்யத் தகவல்!!!

சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக ஒரு பரபரப்பு தகவல் பகிரப்பட்டு வருகிறது.

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம், 2 ஆண்டுகள் சிறை: அதிரடி அறிவிப்பு

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸின் பாதிப்பு மிகவும் குறைந்து கொண்டே வந்ததால் மிக விரைவில் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக கேரளா மாறும்

கொரனோ தடுப்பு மருந்து: ஒரு சில மணி நேரங்களில் அறிக்கையை வாபஸ் பெற்ற அமைச்சகம் 

கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்து 2021 ஆம் ஆண்டுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பில்லை என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருந்த

மக்களுக்கு ரொம்ப நல்லது பண்றீங்க: ரஜினியின் பாராட்டை பெற்ற டாக்டர்

கொரோனா வைரஸ்க்கு இன்னும் தடுப்பு மருந்து மற்றும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை எனினும் அலோபதி மற்றும் சித்தா ஆகிய இரண்டு முறைகளிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது