விஜய் பட நடிகையின் மகனை பாராட்டிய சோனு சூட்!
விஜய் ஜோதிகா நடித்த ’குஷி’ திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடிய நடிகை ஷில்பா ஷெட்டியை யாரும் மறந்திருக்க முடியாது. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜ்குந்த்ரா என்பவரை திருமணம் செய்தார் என்பதும், இவருக்கு வியான் மற்றும் சமிஷா ஷெட்டி ஆகிய குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷில்பா ஷெட்டி தனது மகன் வியான் உருவாக்கிய வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். 8 வயதான வியான், அனிமேஷன் வீடியோவை உருவாக்கியுள்ளதாகவும் இந்த வீடியோவை அவன் உருவாக்குவதற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்த நடிகர் சோனு சூட் தான் என்றும் அதில் ஷில்பா ஷெட்டி குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த சோனு சூட் ’தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் உங்கள் மகனுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் உங்கள் மகன் வியான் உண்மையிலேயே சூப்பர் திறமை உள்ளவர் என்றும் அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார். வியான் உருவாக்கிய இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.