close
Choose your channels

என்னை தவிர எங்கள் வீட்டில் எல்லோருக்கும் கொரோனா: விஜய்யின் 'குஷி' நடிகை தகவல்

Friday, May 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்ற நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி விஜய் நடித்த ‘குஷி’ உள்பட ஒருசில தமிழ் திரைப்படங்களிலும் பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்த நடிகை ஷில்பா ஷெட்டியின் குடும்பத்தினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.

இதுகுறித்து ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது: என்னுடைய பெற்றோர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் என்னுடைய கணவர் உள்பட எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி எங்கள் வீட்டில் பணிபுரியும் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் கடவுளின் அருளால் எனக்கு மட்டும் கொரோனா வைரஸ் நெகட்டிவ் என ரிசல்ட் வந்து உள்ளது. எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து ஒவ்வொருவரும் தனித்தனியாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அனைவரும் மருத்துவர்களின் அறிவுரையின்படி சிகிச்சை பெற்று குணமாகி வருகின்றனர் என்று ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.

மேலும் தயவு செய்து அனைவரும் மாஸ்க் அணிந்து, அவ்வப்போது சனிடைசர் வைத்து கைகளை சுத்தம் செய்து கொள்ளுங்கள் என்றும் கொரோனா வைரஸ் விதிமுறைகளைக் கடைப்பிடித்து பாதுகாப்பாக இருங்கள் என்றும் ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.