கைக்குழந்தையாக ஷிவாங்கி: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Thursday,June 24 2021]

சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகி இருந்தாலும் ஷிவாங்கி மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக குக் வித் கோமாளி சீசன் 1ஐவிட, சீசன் 2 நிகழ்ச்சியில் அவர் வேற லெவல் பிரபலமானார் என்றும் ஷிவாங்கி இல்லாமல் அந்த நிகழ்ச்சியை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று பலரும் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி மூலம் கிடைத்த பிரபலத்தால் அவருக்கு தற்போது திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ஷிவாங்கி 3 மில்லியனுக்கும் மேலாக ஃபாலோயர்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் கைக் குழந்தையாக இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ள ஷிவாங்கி, அதனை அப்படியே இன்றும் இருப்பது போன்று ரீகிரியேஷன் செய்து வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாவில் ஷிவாங்கி பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் ‘நீங்கள் இப்போதும் குழந்தை மாதிரி தான் இருக்கிறீர்கள் என்றும் கமெண்ட்ஸ்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.