close
Choose your channels

ஜாலியாக ரோட் ட்ரிப் சென்ற ஷிவாங்கி: உடன் சென்றவர் யார் தெரியுமா?

Friday, January 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் சிங்கர் உள்பட ஒருசில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள ஷிவாங்கி தற்போது நடைபெற்று வரும் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார் என்பதும், இவரது கள்ளங்கபடம் இல்லாத, கலகலப்பான காமெடியால் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி இந்த நிகழ்ச்சியின் மூலம் ஷிவாங்கியும் புகழின் உச்சத்திற்கு சென்று உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக புகழ் மற்றும் ஷிவாங்கி செய்யும் அண்ணன் தங்கை சேட்டைகள் ரசிக்கும் வகையில் இருப்பதாகவும் அஸ்வினிடம் ஷிவாங்கி நெருக்கமாக இருப்பதும், அதற்கு புகழ் ஆதரவு கொடுப்பதுமான காட்சிகள் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மேலும் கலகலப்பாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் மதுரைக்கு சாலை வழியாக செல்வதாகவும் உடன் தனது அண்ணன் புகழ் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஷிவாங்கி, புகழ் இருவரும் ஜாலியாக சாலையில் வாகனத்தில் சென்று கொண்டு இருக்கும் காட்சிகள் உள்ளன.

இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பல்வேறு விதமான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். ஒரு குறும்புக்கார ரசிகர் ’அண்ணனுடன் மதுரைக்கு போவதற்கு பதிலாக அஸ்வினுடன் மதுரைக்குச் என்றால் ஜாலியாக இருக்கும் செல்லகுட்டி’ என்று கமெண்ட் செய்துள்ளார். மேலும் ஒரு ரசிகர் ’எங்கள் வீடு மதுரையில் தான் உள்ளது எங்கள் வீட்டிற்கு வாங்க’ என்று கமெண்ட் செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.