'ஹார்ட்டுக்குள்ள சத்தம் இல்லை' பிரபல நடிகரின் படத்திற்காக ஷிவாங்கி பாடிய பாடல்!

  • IndiaGlitz, [Thursday,May 27 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான ஷிவாங்கி அதன் பின் ‘குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் வேற லெவலில் பிரபலம் அடைந்தார் என்பது தெரிந்ததே. இந்த பிரபலத்தின் காரணமாக அவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புகளும், பாடும் வாய்ப்புகளும் குவிந்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பிரபல நடிகரின் படத்திற்காக ஷிவாங்கி பாடிய பாடல் ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ளது. சாந்தனு மற்றும் அதுல்யா ரவி நடித்த ’முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற திரைப்படத்திற்காக ஷிவாங்கி மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சாம் விஷால் ஆகிய இருவரும் இணைந்து பாடிய பாடல் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. டாக்கு லெஸ்ஸு வொர்க்கு மோரு’ என்று ஆரம்பிக்கும் இந்த பாடலில் ’ஹார்ட்டுக்குள்ள சத்தம் இல்லை’ என்று ஷிவாங்கி பாடிய வரிகள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சாந்தனு பாக்கியராஜ் ஜோடியாக அதுல்யா ரவி நடித்திருக்கும் இந்த படத்தில் பாக்யராஜ், யோகிபாபு, மதுமிதா உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீஜார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை லிப்ரா புரடொக்சன்ஸ் ரவீந்தர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் ஸ்ருதிஹாசன்? அவரே அளித்த பதில்!

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய

கவின் நடித்த 'லிப்ட்' ஓடிடியில் ரிலீஸா? தயாரிப்பாளர் விளக்கம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய புகழடைந்த கவின் மற்றும் 'பிகில்' படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் ஆகிய இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்த திரைப்படம் 'லிப்ட்'. ஐடி அலுவலகம்

18 மாதக் குழந்தைக்கு கருப்பு பூஞ்சை தொற்று? அதிர்ந்துபோன மருத்துவர்கள்!

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை தற்போது சற்று குறைந்து வருகிறது.

சூர்யா-விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு செம குஷியான தகவல்!

சூர்யா, விஜய் சேதுபதி உள்பட பலர் நடித்த ஆந்தாலஜி திரைப்படமான 'நவரசா' ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளதை அடுத்து சூர்யா, விஜய் சேதுபதி ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்

தமிழக மாணவர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்- பள்ளிக் கல்வித்துறை!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் சார்பாக