close
Choose your channels

நடுரோட்டில் செம ஆட்டம் போட்ட பிக்பாஸ் ஷிவானி நாராயணன்.. வைரல் வீடியோ..!

Saturday, April 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் திரைப்படம் ஒன்றின் பாடலுக்கு நடுரோட்டில் செம ஆட்டம் ஆடிய வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.



நடிகர் வெற்றி நாயகனாக நடித்து வரும் ’பம்பர்’ என்ற திரைப்படத்தில் ஷிவானி நாராயணன் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது.

‘குடி குடி தூத்துக்குடி’ என்று தொடங்கும் இந்த பாடலை ‘96’ படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா கம்போஸ் செய்துள்ளார். கபில் கபிலன் மற்றும் கோவிந்த் வசந்தா பாடிய இந்த பாடலை கார்த்திக் நேதா என்பவர் எழுதியுள்ளார்.

வெற்றி, ஷிவானி நாராயணன், ஹரிஷ் பெரடி, ஜிபி முத்து, தங்கதுரை, கவிதா பாரதி உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை செல்வகுமார் என்பவர் இயக்கி உள்ளார். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவில் காசி விஸ்வநாதன் பட தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.