close
Choose your channels

ரெளடி பேபி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஷிவானி: கலாய்த்த ரசிகர்கள்

Sunday, September 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற ஷிவானி நாராயணன் கடந்த சில மாதங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை சூடு ஏற்றி வருகிறார் என்பது தெரிந்ததே. தினமும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் இன்ஸ்டாகிராமில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஷிவானி நாராயணி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களில் ஒருவர் என்று கூறப்படுவதால் அவர் குறித்த செய்திகள் ஊடகங்களில் அடிக்கடி இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஒரு வீடியோவில் தனுஷ், சாய் பல்லவி, நடித்த மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடிபேபி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோவை பதிவு செய்து உள்ளார்.

சாய்பல்லவியின் டான்ஸ்க்கும் ஷிவானியின் டான்ஸ்க்கும் சம்பந்தமே இல்லை என்றும் ஷிவானியின் ஸ்டெப்ஸ்கள் மிகவும் கேவலமாக இருப்பதாக ரசிகர்கள் பலர் கமெண்ட் பகுதியில் கலாய்த்து வருகின்றனர். இருப்பினும் ஷிவானி நாராயணன் ரசிகர்கள் பலரும் அவரது நடனத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 

View this post on Instagram

❤️??

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.