'கே.ஜி.எப் 2' பாடலுக்கு செம கிளாமர் போஸ் கொடுத்த ஷிவானி: வைரல் வீடியோ


Send us your feedback to audioarticles@vaarta.com


சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்று 1300 கோடி வசூல் செய்த ’கே.ஜி.எப் 2’ படத்தின் பாடல் ஒன்றுக்கு பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் செம கிளாமர் போஸ் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஷிவானி நாராயணனுக்கு தற்போது கமல்ஹாசன் 'விக்ரம்’ உள்பட பல திரைப்படங்களில் கிடைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை அடுத்து அவர் திரையுலகிலும் பிரபலமாகி வருகிறார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 3.50 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள ஷிவானி அவ்வப்போது வெளியிடும் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிக பெரிய அளவில் வைரலாகும்.
அந்த வகையில் சற்று முன்னர் ’கே.ஜி.எப் 2’ படத்தில் இடம்பெற்ற ’தி மான்ஸ்டர்’ பாடலுக்கு செம கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். கடற்கரை பின்னணியில் அவர் கொடுத்துள்ள இந்த கிளாமர் போஸ் வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கிடைத்து வருகிறது.
ஷிவானி நாராயணன் தற்போது வடிவேலுவின் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’, பொன்ராம் இயக்கும் படம், ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படம் மற்றும் ‘பம்பர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.