எஸ்.ஏ.சி கட்சியில் இருந்து விலகிவிட்டேன்: விஜய் தாயார் ஷோபா!

தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் நேற்று விஜய்யின் பெயரில் திடீரென அரசியல் கட்சியை தொடங்குவதற்காக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து தனது தந்தை ஆரம்பித்துள்ள கட்சிக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், தன்னுடைய ரசிகர்கள் அதில் சேர வேண்டாம் என்றும் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் எஸ்ஏ சந்திரசேகர் ஆரம்பித்த கட்சியில் அவரே செயலாளராகவும், விஜய்யின் தாயார் ஷோபா பொருளாளராகவும் இருப்பதாக செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் எஸ்ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் பொருளாளராக நான் இல்லை என்றும் அக்கட்சியிலிருந்து விலகி விட்டேன் என்றும் விஜய்யின் தாயார் ஷோபா தெரிவித்துள்ளார். அசோசியேசன் தொடங்குவதாக என்னிடம் எஸ்.ஏ.சி கையெழுத்து பெற்றார் என்றும், கட்சி தொடங்குவதற்காக இரண்டாவது முறை கையெழுத்து கேட்டபோது நான் கையெழுத்து போடவில்லை என்றும் ஷோபா தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியல் பற்றி எதுவும் பேச வேண்டாம் என எஸ்.ஏ.சியிடம் விஜய் கூறி இருந்ததாக தெரிவித்த ஷோபா, எதிர்காலத்தில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து விஜய் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் மேலும் விஜய் தனது தந்தையிடம் பேசுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஷோபாவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

கடைசி நேரத்தில் காலைவாரிய மணமகள்: தனக்குத்தானே திருமணம் செய்து கொண்ட மணமகன்!

வாலிபர் ஒருவருக்கு இளம் பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட இருந்த நிலையில் திடீரென திருமணத்திற்கு பெண் மணமகள் மறுத்ததால் அந்த வாலிபர் தனக்குத்தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம்

தீபாவளி மற்றும் பொங்கலை குறி வைக்கும் சிம்புவின் 'ஈஸ்வரன்'

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த 'ஈஸ்வரன்'என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே.

ரஜினி பயோபிக்கில் தனுஷ்: பிரபல இயக்குனர் விருப்பம்!

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய திரையுலகில் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களை உருவாக்கும் முயற்சிகள் அதிகம் நடைபெற்று வருகின்றன.

பிக்பாஸ் பாலாஜிக்கு ரெட் கார்டா? பரபரப்பு தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. நிகழ்ச்சியில் சண்டை சச்சரவு அதிகமாக இருந்தாலும் காமெடி மற்றும்

அமெரிக்காவையே பார்த்து- இந்தியாவிடம் போய் பாடம் படிங்க… வைரலாகும் டிவிட்!!!

கடந்த 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. அந்த நாட்டு தேர்தல் விதிமுறைப்படி பெரும்பாலான மக்கள் தேர்தல் நாளுக்கு முன்னதாகவே தபால் ஓட்டுகளை செலுத்தி விட்டனர்.