close
Choose your channels

ஜெ.தீபாவின் உள்ளே-வெளியே விளையாட்டில் சிக்கிய ராஜா

Wednesday, September 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, உண்மையான அதிமுக தங்கள் அணிதான் என்று அவ்வப்போது கூறிக்கொண்டிருந்தாலும் தனக்கென ஒரு அணியை தொடங்கி அதன் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தீபாவுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அவரது கணவர் மாதவன் தனியாக இன்னொரு அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். தீபாவும் மாதவனும் அவ்வப்போது பிரிந்து கொள்வதும் சேர்ந்து கொள்வதுமாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தீபாவின் கார் டிரைவரான ராஜாவை தீபா தனது அமைப்பில் இருந்து நீக்குவதும் பின்னர் மீண்டும் சேர்த்து கொண்டு முக்கிய பதவி கொடுப்பதும் என உள்ளே-வெளியே விளையாட்டு போல் விளையாடி வருகிறார்.

கடந்த சில மாதங்களில் மட்டும் ஏழெட்டு முறை ராஜாவை நீக்குவதும் பின்னர் மீண்டும் அமைப்பில் சேர்த்து கொண்டும் இருக்கும் தீபா, இன்று மீண்டும் ஒருமுறை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதாவின் அரசியல் வாரீசு என்று தன்னைத்தானே கூறிக்கொண்டிருக்கும் தீபா, மக்களுக்காக ஏதாவது உருப்படியாக செய்யாமல் டிரைவரை வைத்து உள்ளே-வெளியே விளையாட்டு விளையாடி வருவது அவரது அமைப்பில் உள்ளவர்களுக்கே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.