கறுப்பினத்தவர் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்திலும் துப்பாக்கிச்சூடு!!! இளைஞனின் வெறிச்செயல்!!!

  • IndiaGlitz, [Thursday,August 27 2020]

 

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை காரில் ஏறச்சென்ற இளைஞரைத் தடுத்து நிறுத்தி போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியச் சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரில் ஏறச்சென்ற ஆப்பிரிக்க அமெரிக்க கறுப்பினத்தவரான ஜேக்கப் பிளேக்கைப் 2 காவல் துறை அதிகாரிகள் பின்தொடர்ந்து அவரின் சட்டைப் பிடித்து இழுத்ததாகவும் அவர் தொடர்ந்து காரில் ஏற முயன்றபோது பின்னால் இருந்து சரமாரியாகச் சுட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

பின்னால் இருந்து ஜேக்கப் பிளேக்கை பலமுறை சுட்டதால் அவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் விஸ்கான்சின் மாகாணத்தின் கினோஷா என்ற பகுதியில் நடைபெற்றதாகவும் சம்பவம் நடைபெற்ற அன்று இரவே அப்பகுதியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் குதித்ததாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. தொடக்கத்தில் சில இடங்களில் மட்டும் கறுப்பினத்தவர் மீதான தாக்குதலுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. ஆனால் தற்போது ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் போராட்டங்கள் களைக்கட்ட தொடங்கியிருக்கிறது.

கடந்த மே 25 ஆம் தேதி மினியா மாகாணத்தில் மினசோட்டா பகுதியில் ஜார்ஜ் பிளாஃய்ட் என்ற இளைஞரை காவலர் ஒருவர் காலால் மிதித்து கொலை செய்தார். இச்சம்பவம் ஒட்டுமொத்த உலகத்திலும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இதனால் அமெரிக்காவில் தொடர்ந்து கறுப்பினத்தவர்கள் அவமதிக்கப் படுகின்றனர் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இந்நிலையில் ஜேக்கப் பிளேக் என்ற இளைஞரை போலீஸார் பின்னால் இருந்து பலமுறை சுட்டச் சம்பவம் அமெரிக்காவில் மீண்டும் போராட்டங்களைத் துவக்கி வைத்திருக்கிறது.

இந்நிலையில் அண்டிஜோ என்ற பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் கெலி ரிட்டின்ஹவுஸ் என்ற 17 வயது இளைஞர் அதிநவீன ரகத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. துப்பாக்கி எடுத்து வந்த அந்த இளைஞர் திடீரென்று போராட்டக் குழுவை நோக்கி சரமாரியாகச் சுடத் தொடங்கியிருக்கிறார். இதனால் போராட்டக்காரர்கள் களைந்து போகத் தொடங்கி இருக்கின்றனர். ஆனால் இளைஞர் சுட்டத்தில் 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டு இருக்கிறது.

காயம் பட்டவர்கள் அருகில் இருந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் 2 பேர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் பேராட்டக் காரர்களை நோக்கி சரமாரியாகச் சுட்ட 17 வயது சிறுவன் செலி ரிட்டின்ஹவுஸ் காவல் துறையினருக்கு நெருக்கமானவர் என்றும் தொடர்ந்து காவல்துறைக்கு ஆதரவு அளிக்கும் கொள்கை உடையவர் என்றும் தகவலும் வெளியாகி இருக்கிறது. இதனால் அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.