ஜனவரி 5,6 தேதிகளில் படப்பிடிப்புகள் ரத்து: நடிகர், தயாரிப்பாளர் சங்கங்கள் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,December 16 2017]

தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் பிரமாண்டமான ‘நட்சத்திர விழா 2018’ வரும் ஜனவரி 6-ம் தேதி மலேசியாவிலுள்ள புக்கட் ஜலீல் இன்டோர் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அன்று முழுவதும் நடைபெறுகிறது. இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் மூத்த நடிகர் நடிகைகளும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்கள்.

மேலும் எல்லா நடிகர்-நடிகைகளும் கலந்து கொள்ள வசதியாக ஜனவரி 5,6 ஆகிய இரண்டு நாட்கள் படப்பிடிப்புகளுக்கு விடுமுறை அளிக்குமாறு தென்னிந்திய நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தது. இதனை ஏற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஜனவரி 5,6 ஆகிய இரண்டு நாட்கள் படப்பிடிப்புகள் ரத்து செய்து விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது.

ஜனவரி 5,6 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் கோலிவுட் திரையுலகின் பெரும்பாலான நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

ஒரே வார இடைவெளியில் மேலும் ஒரு ஆபாச நடிகை மர்ம மரணம்

கடந்த வாரம் கனடாவை சேர்ந்த 23வயது ஆபாச நடிகை ஆகஸ்ட் அமீஸ் என்பவ்ர் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்தார் என்றும் அவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததால் தற்கொலை செய்திருக்கலாம்

பிரபல அரசியல் தலைவருக்கு கமல் பாராட்டு

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சற்றுமுன்னர் ராகுல்காந்தி பதவியேற்று கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

'அருவி'யை மறைமுகமாக தாக்குகிறாரா லட்சுமி ராமகிருஷ்ணன்?

நேற்று வெளியான 'அருவி' திரைப்படம் ரசிகர்கள், ஊடகங்கள், விமர்சகர்களின் பெரும் பாராட்டை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.

ஆர்.கே.நகரில் தேர்தல் நிறுத்தப்பட்டால் நல்லதுதான்: கங்கை அமரன்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றன.

முதல் படத்திலேயே நயன்தாரா சம்பளத்தை நெருங்கிய சன்னிலியோன்

இயக்குனர் வடிவுடையான் இயக்கத்தில் சன்னிலியோன் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் இந்த படம் ஒரு சரித்திர படம் என்றும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.