close
Choose your channels

கணவருடன் லிப்லாக்: ரஜினி, விஜய் நாயகியின் புகைப்படம் வைரல்

Sunday, September 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’, தளபதி விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’ உள்பட பல தமிழ் திரைப் படங்களிலும் தெலுங்கு மற்றும் இந்திப் படங்களிலும் நடித்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் தற்போது எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த கொரோனா காலத்தில் தனது கணவருடன் ஸ்பெயினில் இருக்கும் இவர் அங்கிருந்து கொண்டே தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஸ்ரேயா தனது பிறந்தநாளை கொண்டாடியதை அடுத்து பிறந்த நாளில் அவர் நடித்த திரைப்படம் ’கமனம்’ என்ற படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் சக நடிகர்-நடிகைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடப்பட்டது

இந்த நிலையில் தனது பிறந்தநாளில் கணவருடன் எடுத்த விதவிதமான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவற்றில் ஒன்று கணவருக்கு லிப்லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படமாக உள்ளது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.